மகாராஷ்டிராவைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர், மனநலப் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது குடும்பத்தினரைப் பிரிந்து தவித்துவந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் அந்த நபர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்து வைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில், அந்த நபர் தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

