Settings

முகப்பு/செய்திகள்/தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
செய்திகள்

தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

🕒 26 அக்., 2026, 01:02 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பாஸ்கர் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர் மழையினால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள நீரை விரைந்து வெளியேற்றவும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் சிவா, ஆரணி நகர மன்றத் தலைவர் ஏ.சி.மணி, நகராட்சி ஆணையாளர் என்.டி.வேலவன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔