சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் கூடும் அடிவாரப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!
News

விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் கூடும் அடிவாரப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

The News Outlook
🕒 25 ஜூலை, 2026, 06:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் கூடும் அடிவாரப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள். அப்போது தாணிப்பாறை அடிவார பகுதியில் உள்ள தோப்புகளில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். ஆடி அமாவாசை திருவிழாவானது ஆக 10 ந் தேதி முதல் ஆக 13 ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இதுவரை பக்தர்களின் அடிப்படை வசதிகளான மின்விளக்குகள், பக்தர்கள் தங்கும் கூடாரங்கள், கூடுதல் கழிப்பறை, குடிதண்ணீர், தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாராஜபுரம் ஊராட்சி சார்பாக செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டும் பக்தர்கள், முன்கூட்டியே முறையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கடைசி நேரத்தில் அவசரகதியாக அடிப்படை வசதி பணிகள் மேற்கொண்டால் பக்தர்களுக்கு அது பயனளிக்காது எனவும் தெரிவித்துள்ளனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...