டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 24 ஆயிரம் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எஃப்.எல்.2 தனியார் மதுக்கூடங்களில் சமூக வலைதளங்களுக்காக வீடியோக்கள் எடுத்து பணியாளர்களை அச்சுறுத்தும் செயல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஐந்து முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பழனி பாரதி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Tamil Nadu
ஜூலை 7-ல் டாஸ்மாக் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்: பணியாளர் சங்கம் அறிவிப்பு
The News Outlook
🕒 3 ஜூலை, 2026, 02:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
