கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து 'அர்னாப்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து அக்டோபர் 28-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பாம்பன், ராமேஸ்வரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், ராமேஸ்வரம் தீவுப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

