கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கில் சாதிய ரீதியாக துன்புறுத்திய இரண்டு சக மாணவர்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு. கோவை பீளமேடு கே கே நாயுடு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன். இவர் பள்ளியில் சாதிய ரீதியாக துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு தினங்களாக மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் காவல் நிலையத்தில் போராடி வந்தனர். இன்று சாதிய ரீதியாக துன்புறுத்தலால் கொடுத்த மாணவர்கள் இரண்டு பேரை கைது செய்து இளஞ்சிரார் நீதிக்குழுமம் முன்பு ஆஜார் படுத்தப்பட்ட பின்பு இரண்டு பேரையும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு
கோவை மாணவர் அகிலன் வழக்கில் இரண்டு மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
🕒 24 அக்., 2026, 10:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கோவை மாணவர் அகிலன் வழக்கில் இரண்டு மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
