தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்குக் கருவூலம் மூலமாகவே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுக்கான மாறுதல்களை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அரசாணை எண் 152 மற்றும் 10-ன் படி அலுவலக உதவியாளர், வருவாய் உதவியாளர், கன்சர்வென்சி இன்ஸ்பெக்டர், ஓட்டுநர், குடிநீர் பிரிவு அடிப்படைப் பணியிடங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன் பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஊழியர்களுக்குத் தடையின்றி பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். எல்லை விரிவாக்கப் பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
News
நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் நகராட்சி முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 01:30 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

