விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பேருந்து நிறுத்தம் அருகே இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை முழுவதுமாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், திருச்சுழி யைச் சுற்றியுள்ள ஒன்பது அஷ்டலிங்க சிவன் கோவில்களை தமிழக அரசே பொறுப்பெடுத்து புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் RSS அறிவுசார் பிரிவு விருதுநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் முருகன், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் பண்ணை கந்தசாமி மற்றும் திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியங்களில் இருந்து இந்துமுன்னணி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சுழி காவல் ஆய்வாளர் விஜயபாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
News
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர்ப் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
The News Outlook
🕒 26 ஜூலை, 2026, 03:05 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
