விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சாலை இலுப்பைகுளம் பகுதியில் நரிக்குடி போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணையில் அந்த நபர் துலுக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் மகன் முத்துக்குமார் (37) என்பதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் குட்கா பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை நரிக்குடி காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 2,62,000 (இரண்டு இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் ரூபாய்) மதிப்பிலான 457.6கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கொண்டு வர பயன்படுத்திய டாடா ஏஸ் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை கடத்தி முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த நரிக்குடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
News
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 457.6 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது!
The News Outlook
🕒 25 ஜூலை, 2026, 11:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
