சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.
News

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.

The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 03:38 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விமல்ராஜ் 35, மாற்றுத்திறனாளி. ரயில்வே ஸ்டேஷன் அருகே TP மில்ஸ் சாலையில் இவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோ உள்ளது. இதில் ஜெராக்ஸ், கிப்ட் சென்டர் வைத்துள்ளார். மாலை 7 மணிக்கு கடை ஊழியர்கள் கடையை மூடி அருகே இருந்த டீ கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்து புகை வெளியேறியபடி இருந்துள்ளது. கடை ஊழியர்கள் வந்து பார்த்தபோது உள்ளே தீ கொழுந்து விட்டு எரிந்தது. அருகே நெருங்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையிலான வீரர்கள் கடையின் கதவை உடைத்து 45 நிமிடம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் கடையில் இருந்த ஜெராக்ஸ், கேமரா, கிப்ட் பொருட்கள் எரிந்து சேதமாகின. விபத்து காரணமாக TPமில்ஸ் மெயின் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...