Settings

முகப்பு/நகரங்கள்/கராத்தே போட்டியில் களமிறங்கிய 700 வீரர்கள்.. விழுப்புரத்தில் மிரட்டலான போதை ஒழிப்பு உறுதிமொழி!
நகரங்கள்

கராத்தே போட்டியில் களமிறங்கிய 700 வீரர்கள்.. விழுப்புரத்தில் மிரட்டலான போதை ஒழிப்பு உறுதிமொழி!

🕒 24 நவ., 2026, 06:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கராத்தே போட்டியில் களமிறங்கிய 700 வீரர்கள்.. விழுப்புரத்தில் மிரட்டலான போதை ஒழிப்பு உறுதிமொழி! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •விழுப்புரத்தில் AIM'S கராத்தே பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற 1st ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 700-க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள உள்விளையாட்டு அரங்கில், AIM'S கராத்தே பயிற்சி மையத்தின் சார்பில் 'AIM'S 1st ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026' போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. P. ரகுராமன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியின் தொடக்க விழாவிற்கு மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அ. நேவிஸ் அந்தோணி ரோசி, காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் R. செல்வராஜ், ஜே.ஆர்.சி மாவட்ட கன்வீனரும், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினருமான முனைவர் ம. பாபு செல்வதுரை, விழுப்புரம் லயன்ஸ் சங்க நிர்வாகி A. முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, போட்டியில் பங்கேற்ற சுமார் 700-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப்பொருட்களைப் பயன்படுத்தாமல் தனிவாழ்வில் முன்மாதிரியாகத் திகழ்வதோடு, அதுகுறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், வலிமையான உடலை உருவாக்கும் கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் பயில்வோர்கள் நல்லொழுக்கத்துடன் பொதுமக்களுக்கு நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. நிறைவாக, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்நகரங்கள்

மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்

Dinesh🕒 நவ. 24
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!நகரங்கள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!

Dinesh🕒 நவ. 24
அரசு பள்ளியில் கழிப்பறை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ திலீப் நேரில் ஆய்வு!நகரங்கள்

அரசு பள்ளியில் கழிப்பறை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ திலீப் நேரில் ஆய்வு!

SRIDHAR🕒 நவ. 24
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: அதிகாரியிடம் குவியும் புகாரால் பரபரப்பு!நகரங்கள்

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: அதிகாரியிடம் குவியும் புகாரால் பரபரப்பு!

Srinivasan🕒 நவ. 24
செல்போன் டவரில் துணிகர திருட்டு! ரூ.10 லட்சம் பொருட்கள் அபேஸ் - தஞ்சையில் பரபரப்பு!செய்திகள்

செல்போன் டவரில் துணிகர திருட்டு! ரூ.10 லட்சம் பொருட்கள் அபேஸ் - தஞ்சையில் பரபரப்பு!

Rajan🕒 நவ. 24
மக்கள் தொடர்பு முகாம்: 60 பயனாளிகளுக்கு ரூ.9.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்: 60 பயனாளிகளுக்கு ரூ.9.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

SASHVI🕒 நவ. 24
ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!

Anandakumar🕒 நவ. 24
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!ஆன்மீகம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!

Moorthi🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔