Settings

முகப்பு/செய்திகள்/ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!
செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!

🕒 24 நவ., 2026, 10:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே ஆசிரியர்கள் இல்லாததால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் அவதிப்பட்ட சம்பவம் குறித்து கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள பெரிய வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 21 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கோமதியும், ஆசிரியராக செந்தில்குமாரும் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆசிரியர் செந்தில்குமார் கடந்த மூன்று மாதங்களாக அடிக்கடி விடுப்பு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் கோமதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரும் விடுப்பில் சென்றுள்ளார். இதன் காரணமாக, இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பள்ளி வளாகத்திலும் சாலையிலும் பாதுகாப்பற்ற முறையில் அங்கும் இங்குமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர், காலை 10.30 மணிக்கு மேல் வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வரவழைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டாரக் கல்வி அலுவலர் மீனா, உடனடியாகப் பள்ளிக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், தலைமை ஆசிரியருக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையே மாணவர்களின் இந்த நிலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அலுவலர் தெரிவித்தார். ஆசிரியர்களின் உள்விவகாரங்களால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது பெற்றோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்செய்திகள்

உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்

JOWIN AKASH🕒 நவ. 24
சாலை நெரிசல்: எஸ்பி மதிவாணன் முன்னிலையில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!செய்திகள்

சாலை நெரிசல்: எஸ்பி மதிவாணன் முன்னிலையில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

Manimaran🕒 நவ. 24
26-ந்தேதி மின்தடை: 32 பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்!செய்திகள்

26-ந்தேதி மின்தடை: 32 பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்!

Rajan🕒 நவ. 24
சிமெண்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு: VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்செய்திகள்

சிமெண்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு: VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

Ramkumarsamy🕒 நவ. 24
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!ஆன்மீகம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!

Moorthi🕒 நவ. 24
மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!நகரங்கள்

மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!

Ramkumarsamy🕒 நவ. 24
6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்!அரசியல்

6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்!

Rajan🕒 நவ. 24
அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ரூ.2.15 லட்சம் மதிப்பிலான வசதிகளை வழங்கிய டி.எம்.பி. அறக்கட்டளை!நகரங்கள்

அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ரூ.2.15 லட்சம் மதிப்பிலான வசதிகளை வழங்கிய டி.எம்.பி. அறக்கட்டளை!

JOWIN AKASH🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔