Settings

முகப்பு/வேலைவாய்ப்பு/TNPSC குரூப்-4 இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அறிவிப்பு!
வேலைவாய்ப்பு

TNPSC குரூப்-4 இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அறிவிப்பு!

🕒 13 அக்., 2026, 05:22 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
TNPSC குரூப்-4 இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அறிவிப்பு!
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 16 முதல் தொடங்குகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 16 முதல் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப்-4 தேர்வு அறிவிக்கையின்படி, காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 16, 2026 முதல் நேரடியாகத் தொடங்குகின்றன.

தகுதி வரம்பு:

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (வயது வரம்பு: 18 முதல் 35 வரை)
  • 12ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றவர்கள் (வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை)

இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் அனைவரும் இவ்விலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளின் சிறப்பு அம்சங்கள்:

  • TNPSC பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகளும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
  • மாதிரித் தேர்வுகள் நிறைவடைந்ததும், பாட வல்லுநர்களைக் கொண்டு வினாக்கள் குறித்த குழு விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
  • www.tncareerservices.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • கல்வித் தொலைக்காட்சி வாயிலாக காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச வைஃபை (Wi-Fi) வசதியும், போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதியும் உள்ளது.

போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔