Settings

முகப்பு/நகரங்கள்/திருப்பத்தூர் ஏலகிரி விடுதியில் பெண் தற்கொலை - காதலர் கைது
நகரங்கள்

திருப்பத்தூர் ஏலகிரி விடுதியில் பெண் தற்கொலை - காதலர் கைது

🕒 29 அக்., 2026, 03:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூர் ஏலகிரி விடுதியில் பெண் தற்கொலை - காதலர் கைது
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவருடன் தங்கியிருந்த ரயில்வே ஊழியர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருடன் தங்கியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்பூர் அருகே உள்ள ரெட்டிமாகுப்பத்தைச் சேர்ந்த தமிழரசி (44), கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், வாணியம்பாடி உதயேந்திரத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் யுவராஜ் (43) என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக, நள்ளிரவு ஒரு மணியளவில் தமிழரசி குளியலறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், யுவராஜ் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தமிழரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை காவல்துறையினர், தமிழரசியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், யுவராஜைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔