திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழைக்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களும் பனிமூட்டத்தால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கள்ளிக்குடி, சேந்தமங்கலம், கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி, விளக்குடி மற்றும் ராயநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த தீவிர பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் வேளையிலும் முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டபடி பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காலை நேரப் பணிகளுக்குச் செல்வோர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த குளிர்காலச் சூழலால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சாலைகளில் மட்டுமின்றி, நீர்நிலைகள் மற்றும் சம்பா நெற்பயிர்கள் வளரும் விவசாய நிலங்கள் மீதும் பனிப்படலம் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

