Settings

முகப்பு/நகரங்கள்/மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு - கிராம மக்கள் அவதி
நகரங்கள்

மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு - கிராம மக்கள் அவதி

🕒 26 அக்., 2026, 08:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு - கிராம மக்கள் அவதி
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தில் சைடு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாய்க்காலை மீட்டுச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட மேல்வாலை கிராமத்தில், மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேல்வாலை கிராமத்தில் உள்ள புல எண்கள் 46/8, 77/1A, 46/7A மற்றும் 46/7B நிலப்பகுதிகளில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சைடு வாய்க்கால், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்க்காலைச் சீரமைத்து மழைநீர் தடையின்றிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைநீர் தேங்காமல் சீராக வெளியேறுவதற்கு இந்த வாய்க்கால் மிகவும் அவசியமானதாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை மீட்டுச் சீரமைக்க வேண்டும் என்பதே மேல்வாலை கிராம மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔