திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட குண்டி மாரியம்மன் வட்டம் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளன.
இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

