Settings

முகப்பு/நகரங்கள்/ஜில்லுனு ஒரு காலநிலை! நெல்லையில் தொடரும் சாரல் மழையால் குளிர்ந்துபோன மாநகரம்!
நகரங்கள்

ஜில்லுனு ஒரு காலநிலை! நெல்லையில் தொடரும் சாரல் மழையால் குளிர்ந்துபோன மாநகரம்!

🕒 26 நவ., 2026, 04:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஜில்லுனு ஒரு காலநிலை! நெல்லையில் தொடரும் சாரல் மழையால் குளிர்ந்துபோன மாநகரம்! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் சாரல் மழையால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி பள்ளிக்குச் சென்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் நெல்லை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பாளை, டவுன், சந்திப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட மாநகரின் முக்கியப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களிலும் இடைவிடாது சாரல் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

காலையிலேயே சாரல் மழை நீடித்த போதிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் காலை நேரத்திலேயே கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குடை மற்றும் மழைக்கோட்டுகள் அணிந்தபடியும் அவர்கள் பள்ளிகளுக்குச் சென்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் பாதுகாப்பாகப் பள்ளிகளில் கொண்டு சென்று விட்டனர்.

இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாகச் சாலைகளில் ஏற்பட்ட ஈரப்பதம் மற்றும் சாரல் மழையால் காலை நேரப் போக்குவரத்து சற்று மெதுவாகவே காணப்பட்டது. மேலும், நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கலசப்பாக்கம் மிருகண்டா நதி அணை நிலவரம்: முழு விவரம் இதோ!நகரங்கள்

கலசப்பாக்கம் மிருகண்டா நதி அணை நிலவரம்: முழு விவரம் இதோ!

Manimaran🕒 நவ. 26
75 சதவீதத்தை கடந்த செண்பகத் தோப்பு அணை நீர் இருப்பு! இன்றைய நிலவரம்!நகரங்கள்

75 சதவீதத்தை கடந்த செண்பகத் தோப்பு அணை நீர் இருப்பு! இன்றைய நிலவரம்!

Manimaran🕒 நவ. 26
தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!நகரங்கள்

தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Dinesh🕒 நவ. 26
பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!நகரங்கள்

பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!

ARAVINDHAN🕒 நவ. 26
தரங்கம்பாடியில் மணலில் உருவான டேனிஷ் கோட்டை: வைரலாகும் மணல் சிற்பம்!செய்திகள்

தரங்கம்பாடியில் மணலில் உருவான டேனிஷ் கோட்டை: வைரலாகும் மணல் சிற்பம்!

SASHVI🕒 நவ. 26
தவெக பிரமுகர் கார் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

தவெக பிரமுகர் கார் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

JOWIN AKASH🕒 நவ. 26
நலவாரியங்களை முடக்காதே! விருதுநகரில் திரண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்செய்திகள்

நலவாரியங்களை முடக்காதே! விருதுநகரில் திரண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்

Ramkumarsamy🕒 நவ. 26
நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.பல லட்சம் மதிப்பிலான 4,428 கடல் சங்குகள் அழிப்பு!செய்திகள்

நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.பல லட்சம் மதிப்பிலான 4,428 கடல் சங்குகள் அழிப்பு!

Vijayaragavan🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔