திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், சோலூர், மின்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலும் இந்த உறைபனி மற்றும் பனிமூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டபடியும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொண்டனர். காலை வேளையில் நிலவிய இந்த அசாதாரணமான கடும் பனிப்பொழிவு காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள்
பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!
🕒 26 நவ., 2026, 01:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








