கரூர் மாவட்டம், வெங்ககல்பட்டி அருகே சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில், ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
வெள்ளியணை பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து 13 டன் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. வெங்ககல்பட்டி அருகே சென்றபோது, லாரியின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சில நிமிடங்களிலேயே லாரி முழுவதும் தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





