திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமை காவலராகப் பணியாற்றும் குபேந்திரன், மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
வேலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி-2026-ல் பங்கேற்ற அவர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரேவை நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார்.

