செப்டம்பர் 6-ல் வெளியாகும் நிலையில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்
நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், அஜித்குமார் கார் பந்தயத்தில் சந்தித்த சவால்கள், பின்னடைவுகள் மற்றும் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அவர் பங்கேற்ற முக்கிய தருணங்களை பதிவு செய்கிறது.
இந்த நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரையரங்குகளில் ரசிகர்களுக்காக டிரெய்லர் சிறப்பு திரையிடல் நடைபெற உள்ளது.
அஜித்தின் ரேசிங் பயணத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் போட்டிகளில் பெற்ற அனுபவங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை நேரடியாக பதிவு செய்துள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மேலும், துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்ற காட்சிகளும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 துபாய் 24H போட்டியில் அஜித் பங்கேற்று போடியம் பெற்ற தருணங்களும் இதில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லர் திரையரங்குகளில் சிறப்பு திரையிடப்பட உள்ள தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் முழு வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

