நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள இந்தக் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை தொடங்கி வைத்தும் முதல்வர் ச.ஜோசப் விஜய் உரையாற்றினார். அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பரமத்தி வேலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர், தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்ட உறுப்பினர் சதீஷ் மற்றும் இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கட்சி பாகுபாடின்றி கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.









