Settings

முகப்பு/தமிழ்நாடு/மக்களுக்கு சூப்பர் செய்தி: பள்ளப்பட்டியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் திறப்பு!
தமிழ்நாடு

மக்களுக்கு சூப்பர் செய்தி: பள்ளப்பட்டியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் திறப்பு!

🕒 18 நவ., 2026, 02:34 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மக்களுக்கு சூப்பர் செய்தி: பள்ளப்பட்டியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் திறப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இந்தத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசன்னா ராமசாமி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ முன்னிலையில் குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தின் பணிகளைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஏழை, எளிய மக்களும் தரமான மருத்துவச் சேவைகளைப் பெறும் வகையில், தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் 1935ஆம் ஆண்டு பொதுமக்களின் நன்கொடை மூலம் தொடங்கப்பட்ட இப்பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை, தற்போது தினந்தோறும் 400 முதல் 500 வெளிநோயாளிகளுக்கும், சராசரியாக 40 உள்நோயாளிகளுக்கும் சேவையாற்றும் முக்கிய மருத்துவ மையமாகத் திகழ்கிறது. மேலும், இங்கு நாள்தோறும் 15 பயனாளிகளுக்கு சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சேவையும், மாதந்தோறும் 15 முதல் 20 பிரசவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பழுதடைந்த பழைய கட்டிடங்களுக்கு மாற்றாக, PMJVK திட்டத்தின் கீழ் நவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மின்தூக்கி வசதியுடன் கூடிய இந்த புதிய G+3 கட்டிடத்தில் மொத்தம் 52 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன:

  • கீழ்தளம்: புறநோயாளிகள், பல் மருத்துவம், தொற்றா நோய், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள்.
  • முதல் தளம்: ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவுகள், பிரசவத்திற்குப் பிந்தைய கவனிப்பு மற்றும் காப்பீட்டுத் திட்ட சிறப்புப் பிரிவுகள்.
  • இரண்டாம் தளம்: நவீன அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புப் பிரிவு.
  • மூன்றாம் தளம்: குருதி சேமிப்பு பகுதி, நிர்வாக அலுவலகம் மற்றும் மருத்துவ ஆவணங்கள் சேகரிக்கும் அறை.

புதிய கட்டிடத்துடன் சேர்த்து, பழைய கட்டிடத்தில் உள்ள 2 சிறுநீரக சுத்திகரிப்பு பகுதி, 6 காசநோய் சிகிச்சை பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சை பிரிவு, 10 படுக்கைகளுடன் கூடிய காய்ச்சலுக்கான சிகிச்சை பிரிவு, மருந்தகம் மற்றும் இரத்த பரிசோதனை நிலையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும்.

இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகர் மன்றத் தலைவர் முனைவர் ஜான், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. வடிவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகமது பைசல், பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் ஆனந்தகுமார், பள்ளப்பட்டி தலைமை மருத்துவ அலுவலர் வித்யாவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மண்பாண்டத் தொழிலாளர்களின் கண்ணீர்: அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் என்ன?தமிழ்நாடு

மண்பாண்டத் தொழிலாளர்களின் கண்ணீர்: அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் என்ன?

NESARAJAN🕒 நவ. 22
பெண் குழந்தைகளை காப்போம்! மயிலாடுதுறையில் திரண்ட மாணவிகள் - மாரத்தான் போட்டிதமிழ்நாடு

பெண் குழந்தைகளை காப்போம்! மயிலாடுதுறையில் திரண்ட மாணவிகள் - மாரத்தான் போட்டி

SASHVI🕒 நவ. 22
பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!தமிழ்நாடு

பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!

Anandakumar🕒 நவ. 21
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Arivazhagan🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!

Arivazhagan🕒 நவ. 21
தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!நகரங்கள்

தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!

Rajan🕒 நவ. 24
வட்டாட்சியர் அலுவலக பதிவு அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் திடீர் ஆய்வு!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலக பதிவு அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் திடீர் ஆய்வு!

SRIDHAR🕒 நவ. 24
தீப விவகாரம்: தஞ்சையில் தீவிரமடைந்த பாஜக ஆர்ப்பாட்டம்!அரசியல்

தீப விவகாரம்: தஞ்சையில் தீவிரமடைந்த பாஜக ஆர்ப்பாட்டம்!

Rajan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔