ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மொடச்சூர் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கோபி தவெக நிர்வாகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தவெக மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கித் தன் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பிரசன்னா, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.









