Settings

முகப்பு/அரசியல்/மாநில உரிமைகளை மீட்க களம் இறங்கும் கம்யூனிஸ்ட் கட்சி: டிசம்பரில் அதிரடி போராட்டம்!
அரசியல்

மாநில உரிமைகளை மீட்க களம் இறங்கும் கம்யூனிஸ்ட் கட்சி: டிசம்பரில் அதிரடி போராட்டம்!

🕒 18 நவ., 2026, 06:35 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மாநில உரிமைகளை மீட்க களம் இறங்கும் கம்யூனிஸ்ட் கட்சி: டிசம்பரில் அதிரடி போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விலைவாசி உயர்வு மற்றும் மாநில உரிமைகளை வலியுறுத்தி டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து வரும் டிசம்பர் 1, 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

திருச்சி உறையூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது:

"மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் டிசம்பர் மாதத்தில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு கட்சியின் முன்னணி தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமை தாங்குவார்கள். பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

திருச்சி மேம்பாலப் பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு:

தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் மையப்பகுதியாகவும், தொழில் மற்றும் போக்குவரத்திற்கு முக்கிய மையமாகவும் விளங்கும் திருச்சியில், கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும், அடுத்தடுத்து பதற்றச் சூழல் உருவாகும் திருச்சியில், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் நியமிக்கப்படாத நிலையை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரம்:

பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் முன்னிலையில் கர்நாடக முதல்வர் மேகதாது அணை கட்டப்படும் எனப் பேசியிருப்பது இரு மாநில நல்லுறவைக் கெடுக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்ட அவர், இது நதிநீர் பிரச்சனை மட்டுமல்லாமல், டெல்டா மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் ஒன்றிய அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்றார். மேலும், நதிகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்:

தமிழக அமைச்சர்கள் டெல்லியில் கோரியுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை, கடந்த காலங்களைப் போல தடையோ நெருக்கடியோ தராமல் ஒன்றிய அரசு சட்டப்படியாக உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், கோலாலம்பூரில் நடைபெறும் தமிழர் தொன்மை ஆய்வு மாநாட்டில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் பங்கேற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:

உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்பி, வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார். மேலும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் கருத்துகள் ஏற்புடையதல்ல என்றும், நீதிபதியும் நீதிமன்றமும் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதர கோரிக்கைகள்:

பி.சி.ஆர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறிப் போராட்டம் நடத்துவது தவறு எனத் தெரிவித்த அவர், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க இச்சட்டம் அத்தியாவசியமானது என்றார். நடைபாதை வியாபாரிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தாமல், அவர்களை முறைப்படுத்தி வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையை ஒழிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு. வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பாமக நிர்வாகி பேனர் மீது மாட்டுச்சாணம் வீச்சு: சாலை மறியலால் பரபரப்புஅரசியல்

பாமக நிர்வாகி பேனர் மீது மாட்டுச்சாணம் வீச்சு: சாலை மறியலால் பரபரப்பு

Rajan🕒 நவ. 21
ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்அரசியல்

ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்

VASANTHA🕒 நவ. 21
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!செய்திகள்

நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Vijayaragavan🕒 நவ. 22
காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

MSD🕒 நவ. 22
பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!நகரங்கள்

பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!

Ramachandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔