Settings

முகப்பு/செய்திகள்/வ.உ.சி. நினைவு தினத்தில் தள்ளாடிய இளைஞர்கள்.. திருநெல்வேலியில் அதிரடி காட்டிய போலீசார்!
செய்திகள்

வ.உ.சி. நினைவு தினத்தில் தள்ளாடிய இளைஞர்கள்.. திருநெல்வேலியில் அதிரடி காட்டிய போலீசார்!

🕒 18 நவ., 2026, 11:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வ.உ.சி. நினைவு தினத்தில் தள்ளாடிய இளைஞர்கள்.. திருநெல்வேலியில் அதிரடி காட்டிய போலீசார்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருநெல்வேலி வ.உ.சி. மணிமண்டபம் அருகே நினைவு தினத்தின்போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மதுரை இளைஞர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வ.உ.சி. சிதம்பரனாரின் 90-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி டவுனில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் காரில் மணிமண்டபத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது, மணிமண்டபத்தின் வாசல் பகுதியில் சாலையை மறித்து அந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் முயன்ற போலீசார், கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். ஆரம்ப விசாரணையில், குறிப்பிட்ட சில இளைஞர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதன்காரணமாகவே அவர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வ.உ.சி. நினைவு தின நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!

Anandakumar🕒 நவ. 24
விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: மயிலாடுதுறையில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!செய்திகள்

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: மயிலாடுதுறையில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!

SASHVI🕒 நவ. 24
வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!செய்திகள்

வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!

Vijayaragavan🕒 நவ. 24
உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!செய்திகள்

உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!

Ramkumarsamy🕒 நவ. 24
திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!

Arivazhagan🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔