குளித்தலையில் உள்ள கரூர் கிழக்கு மாவட்ட தவெக அலுவலகத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் ஆவேசம் ! தவெக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக பழைய நிர்வாகிகளின் குற்றச்சாட்டால் பரபரப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி பெரிய பாலத்தில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் கரூர் கிழக்கு மாவட்ட தவெக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக கரூர் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் பாலசுப்பிரமணி வாட்ஸ் அப் மூலம் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் தவெக நிர்வாகிகள் காலை 10 மணிக்கே மாவட்ட அலுவலகத்திற்கு வந்து இருந்தனர்.
ஆனால் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி மதியம் 1:30 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் பல இடங்களில் திருமணங்கள் நடந்ததால் அங்கு சென்றிருந்ததாவும் அதனால் காலதாமதம் ஏற்பட்டதாக கூறினார். இதனை அடுத்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய மாநில பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற்று அவருடைய ஒப்புதலோடு புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக புதிய நிர்வாகிகளை அதாவது மாவட்ட இணை செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர், மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை வாசித்தார்.
மேலும் நீக்கப்பட்ட நிர்வாகிகளிடம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு வந்த மாவட்ட இணை செயலாளர் சதாசிவம், குளித்தலை மேற்கு நகர செயலாளர் விஜய்,மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் வந்தனர்.
வந்தவர்கள் எங்களை நீக்கியதற்கான காரணம் என்ன? கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலை கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டு தலைமை மீது பழி போடுவதா? நாங்கள் தளபதியின் ரசிகராக பின்னர் மக்கள் இயக்கமாக இருந்த போதும் அதற்குப் பிறகு கட்சி தொடங்கியதற்குப் பிறகும் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறோம்! எங்களை ஒருபோதும் தலைமை நீக்காது. நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதை ஏற்க முடியாது! உங்களுடைய சுயநலத்திற்காக உங்களுடைய வருமானத்திற்காக நீங்கள் முடிவெடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! என்பதை தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிருப்தியாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சதாசிவம் ஆதரவாளருடன் கூட்டாக இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் நற்பணி மன்றத்திலிருந்து விஜய் மக்கள் இயக்கம் முதல் தற்போது கட்சி ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தான் வழங்கி வந்ததாகவும் அதனால்தான் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்தபோது தலைவர் தனக்கு கரூர் கிழக்கு மாவட்ட இனச் செயலாளர் பதவி வழங்கி உள்ளார்.
ஆனால் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி 2026 இடைத்தேர்தலில் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக நிற்க வேண்டும் என்பதற்காக தன் மீது தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் குறித்து தலைமைக்கு தெரிவித்து தன்னை கட்சியிலிருந்து ஒதுக்கி வந்ததாகவும், இது குறித்து தன் விளக்கம் அளித்த போதிலும் அதனை ஏற்க மறுத்துள்ளனர் மேலும் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தன்னிச்சையாக செயல்பட்டு மாவட்டம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.
பலரை மிரட்டி பணம் பறித்து உள்ளார். இது குறித்து தங்கள் கேள்வி கேட்ட போதுதான் தங்களை கட்சியிலிருந்து நீக்குவதாக கூறி எங்கள் மீது பொய்யான புகார்களை தெரிவித்து வருவதாகவும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட இவர் பணம் பெற்றுக் கொண்டுதான் தோற்றுள்ளார் இவருக்கு அளித்த வாக்குகள் அனைத்தும் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு அளித்த வாக்குகள் தான் இவருக்காக அளித்த தனிப்பட்ட வாக்குகள் இல்லை. இது குறித்து நிர்வாகிகள் யாராலும் கேள்வி கேட்டால் உங்களை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறி அவர்களிடமும் சர்வஅதிகாரி போக்குடன் நடந்துள்ளார்.
இது குறித்து தலைமைக்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் மீது உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தலைமையில் உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிப்போம் என்றும் கூறினார். மேலும் ஒருவர் மீது புகார் அளிக்கப்படும் நிலையில் அந்த புகார் குறித்து அவர்களை விசாரிக்காமல் தன்னிச்சையாக முடிவிடுஎடுபதாகவும், தற்போது கூட கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பதில் இவரது லெட்டர் பேடில் தான் நிர்வாகிகள் நியமிப்பதாக கூறி அறிவித்துள்ளார் ஆனால் கட்சியின் தலைமை பொதுச் செயலாளர் அவரின் கையெழுத்து இன்றி இவர் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து விஜய் மக்கள் இயக்கமாக மாறி தவெக கட்சி ஆரம்பித்தபோது இருந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த நபர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் அவர்களை நீக்கிவிட்டு தனது உறவினர்கள் மற்றும் வேண்டியப்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

