Settings

முகப்பு/செய்திகள்/திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா: கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா: கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

🕒 3 நவ., 2026, 01:12 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா: கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் பூர்வாங்கப் பணிகள் தீவிரம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கோவில் கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். மேலும், 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்வதுடன், நேர்த்திக்கடனுக்காகப் பிறந்த குழந்தைகளைக் கரும்புத் தொட்டிலில் வைத்து மாட வீதிகளில் வலம் வருவதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 15ஆம் தேதி, கோவில் சன்னதி எதிரே உள்ள 64 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, வரும் 24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கருவறையில் பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பூர்வாங்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணிகளும், 9 கோபுரங்களிலும் விளக்குகள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தீயணைப்புத் துறை உதவியுடன் அம்முனி அம்மன் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களைத் தண்ணீர் பீய்ச்சி அடித்துச் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பதுக்கலுக்கு செக்: விருதுநகரில் அதிரடியாக அமலுக்கு வந்த கையிருப்பு வரம்பு!செய்திகள்

பதுக்கலுக்கு செக்: விருதுநகரில் அதிரடியாக அமலுக்கு வந்த கையிருப்பு வரம்பு!

Ramkumarsamy🕒 நவ. 18
விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!செய்திகள்

விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

Arivazhagan🕒 நவ. 18
உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்!செய்திகள்

உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்!

Arivazhagan🕒 நவ. 18
மனதை நெகிழ வைத்த மனிதநேயம்! வறுமையில் வாடிய ஆட்டோ ஓட்டுநருக்கு செயற்கை கால் வழங்கி உதவிய திமுக நிர்வாகி!செய்திகள்

மனதை நெகிழ வைத்த மனிதநேயம்! வறுமையில் வாடிய ஆட்டோ ஓட்டுநருக்கு செயற்கை கால் வழங்கி உதவிய திமுக நிர்வாகி!

Arivazhagan🕒 நவ. 18
செயலிழந்ததாக விஜய் அரசை விளாசிய தி.மு.க. எம்.எல்.ஏ! பரபரப்பான பேட்டி!அரசியல்

செயலிழந்ததாக விஜய் அரசை விளாசிய தி.மு.க. எம்.எல்.ஏ! பரபரப்பான பேட்டி!

JOWIN AKASH🕒 நவ. 19
பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு!தமிழ்நாடு

பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு!

Srinivasan🕒 நவ. 19
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மகள் தவெகவில் இணைப்பு!அரசியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மகள் தவெகவில் இணைப்பு!

JOWIN AKASH🕒 நவ. 19
கூரைகுண்டில் அதிரடி தூய்மைப் பணி! ஒரே நாளில் 7 டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது!உணவு & ஆரோக்கியம்

கூரைகுண்டில் அதிரடி தூய்மைப் பணி! ஒரே நாளில் 7 டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது!

Ramkumarsamy🕒 நவ. 18
TNO வாட்ஸ்அப் சானல் ➔