Settings

முகப்பு/செய்திகள்/அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!
செய்திகள்

அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!

🕒 23 நவ., 2026, 10:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல், பணம், நகை இல்லாததால் படுக்கையறையை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பல், பணம் மற்றும் நகை இல்லாத ஆத்திரத்தில் படுக்கையறையை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லிடைக்குறிச்சியை அடுத்த தெற்கு பாப்பான்குளம் மகாராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிளைன்ஸ் ராஜ் (63). இவர் வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும், திருப்பூரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், கிளைன்ஸ் ராஜ் வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மணிமுத்தாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை ஆய்வு செய்தபோது படுக்கையறை தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், வீட்டில் பணம் அல்லது நகைகள் ஏதும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல், அங்கிருந்த பெட்ரூமுக்கு தீ வைத்துவிட்டுத் தப்பியோடினர்.   இந்த தீ விபத்தில் பீரோ, கட்டில், துணிகள் மற்றும் மிக முக்கிய வீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

திருப்பூரில் இருந்து நேற்று இரவு வீடு திரும்பிய கிளைன்ஸ் ராஜ், தனது உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியதைக் கண்டு கடும் வேதனையடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணிமுத்தாறு போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!

VASANTHA🕒 நவ. 23
வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!செய்திகள்

வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!

Muralidharan🕒 நவ. 23
சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!செய்திகள்

சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!

Arivazhagan🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

Anandakumar🕒 நவ. 23
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!நகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

Anandakumar🕒 நவ. 23
முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!செய்திகள்

முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!

Vijayaragavan🕒 நவ. 23
முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி!செய்திகள்

முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி!

SASHVI🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔