Settings

முகப்பு/செய்திகள்/அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது நெல்லை போலீஸில் திடுக்கிடும் புகார்!
செய்திகள்

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது நெல்லை போலீஸில் திடுக்கிடும் புகார்!

🕒 4 நவ., 2026, 02:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது நெல்லை போலீஸில் திடுக்கிடும் புகார்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திரைப்பட வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்திய இன்ஸ்டாகிராம் பிரபலம் கவிதை கோபால் மீது இளம்பெண் நெல்லை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை: திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் கவிதை கோபால் மீது இளம்பெண் ஒருவர் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த அஸ்வினி மேரி (22), பி.ஏ. பட்டதாரியான இவர், இன்ஸ்டாகிராமில் active -ஆக இயங்கி வருகிறார். இவரை இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கவிதை கோபால் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திரைப்படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதா எனக் கேட்டுள்ளார். மேலும், திரைப்பட வாய்ப்பு பெற பணம் கொடுக்க வேண்டும் என்றும், உடல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்றும் பேசியதுடன், உடனடியாக சென்னைக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி மேரி, தனது உறவினர் மூலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தன்னிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்திய கவிதை கோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர் தனது வாட்ஸ்அப் முகப்புப் படமாக அரசியல் பிரமுகரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பதுக்கலுக்கு செக்: விருதுநகரில் அதிரடியாக அமலுக்கு வந்த கையிருப்பு வரம்பு!செய்திகள்

பதுக்கலுக்கு செக்: விருதுநகரில் அதிரடியாக அமலுக்கு வந்த கையிருப்பு வரம்பு!

Ramkumarsamy🕒 நவ. 18
விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!செய்திகள்

விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

Arivazhagan🕒 நவ. 18
உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்!செய்திகள்

உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்!

Arivazhagan🕒 நவ. 18
மனதை நெகிழ வைத்த மனிதநேயம்! வறுமையில் வாடிய ஆட்டோ ஓட்டுநருக்கு செயற்கை கால் வழங்கி உதவிய திமுக நிர்வாகி!செய்திகள்

மனதை நெகிழ வைத்த மனிதநேயம்! வறுமையில் வாடிய ஆட்டோ ஓட்டுநருக்கு செயற்கை கால் வழங்கி உதவிய திமுக நிர்வாகி!

Arivazhagan🕒 நவ. 18
செயலிழந்ததாக விஜய் அரசை விளாசிய தி.மு.க. எம்.எல்.ஏ! பரபரப்பான பேட்டி!அரசியல்

செயலிழந்ததாக விஜய் அரசை விளாசிய தி.மு.க. எம்.எல்.ஏ! பரபரப்பான பேட்டி!

JOWIN AKASH🕒 நவ. 19
பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு!தமிழ்நாடு

பனிப்பொழிவு எதிரொலி - பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர் மற்றும் விழிப்புணர்வு!

Srinivasan🕒 நவ. 19
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மகள் தவெகவில் இணைப்பு!அரசியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மகள் தவெகவில் இணைப்பு!

JOWIN AKASH🕒 நவ. 19
கூரைகுண்டில் அதிரடி தூய்மைப் பணி! ஒரே நாளில் 7 டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது!உணவு & ஆரோக்கியம்

கூரைகுண்டில் அதிரடி தூய்மைப் பணி! ஒரே நாளில் 7 டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது!

Ramkumarsamy🕒 நவ. 18
TNO வாட்ஸ்அப் சானல் ➔