விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அனைவரும் உடனடியாகத் தங்கள் விவசாய அடையாள அட்டையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், எதிர்காலத்தில் நிலங்களுக்குத் தேவையான உரங்களைப் பெறுவதிலும், பயிர்க் காப்பீடு செய்வதிலும், அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களின் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களது அனைத்து சர்வே எண்களும் விவசாய அடையாள அட்டையுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

