Settings

முகப்பு/விவசாயம்/20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு
விவசாயம்

20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

🕒 26 அக்., 2026, 08:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோனதால், 20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனை உடனடியாக சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தில், என்.எச்.45 ஏ தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் காரணமாக வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோனது. இதனால், நாகநாதர் கோயிலைச் சுற்றியுள்ள 20 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வடிகால் வாய்க்காலை சரிசெய்து தருமாறு கோரி விவசாயிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே மனு அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த பத்து நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் வயல்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால், நடவு செய்து இரண்டு வாரங்களே ஆன இளம் சம்பா பயிர்கள் முழுமையாக மூழ்கியுள்ளன.

உடனடியாக வடிகாலைச் சீரமைக்காவிட்டால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செம்பதனிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔