கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்துள்ளதால், பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் லேசான மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. இந்நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம், ரவுண்டானா, திருக்காம்புலியூர், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் மதிய வேளையில் திடீரென்று மழை பெய்தது. தற்பொழுது பனிக்காலம் தொடங்கியுள்ள சூழலில், ஆங்காங்கே பனிமூட்டம் நிலவி வந்த நிலையில் பெய்த இந்த திடீர் மழை பொதுமக்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை (ஹெட்லைட்) எரியவிட்டபடி சென்றனர். தீபத்திருநாளான இன்று பெய்துள்ள இந்த திடீர் மழை, அப்பகுதி பக்தர்களையும் விவசாயிகளையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், வறண்ட வானிலைக்குச் சற்று நிவாரணம் அளித்துள்ளது.
நகரங்கள்
தீபாவளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!
🕒 24 நவ., 2026, 09:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 6
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (6)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்துள்ளது. பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தீபத்திருநாளான இன்று பெய்துள்ள மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








