திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 'விழுதுகள்' புதிய சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழாவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், இணை மறுவாழ்வு அலுவலர் காயத்ரி, மாவட்ட வல்லுநர் அஸ்டின், நாட்றம்பள்ளி ஒன்றிய சமூக வழிநடத்துநர் த.பாலாஜி மற்றும் சமுதாய மறுவாழ்வு பணியாளர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி பெருமாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சிச் செயலாளர் ஜெயசுதா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.









