தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நகைக்கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரிகள் தொடர்பு கொண்டு, நகைக் கடனுக்கான ஓர வைப்புத் தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் தொகைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனai அடுத்து, வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு கூடுதல் ஓர வைப்புத் தொகை (Margin Money) செலுத்துமாறு வங்கிகள் கேட்டுக்கொண்டு வருகின்றன.
முன்னதாக ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.12,000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய விலைச் சரிவைத் தொடர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.8,000-க்கும் குறைவாகவே கடன் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக நகைக்கடன் பெற வங்கிகளை நாடுகிறவர்கள் குறைந்த தொகையே கிடைப்பதால் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் வரை இந்நிலையே தொடரும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









