சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று விலை குறைந்திருந்தது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

