Settings

முகப்பு/விவசாயம்/விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நவீன ட்ரோன் தொழில்நுட்பம்!
விவசாயம்

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நவீன ட்ரோன் தொழில்நுட்பம்!

🕒 24 அக்., 2026, 07:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நவீன ட்ரோன் தொழில்நுட்பம்!
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆள் பற்றாக்குறையைப் போக்க விவசாயிகள் ட்ரோன் மூலம் களைக்கொல்லி அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பொன்னிறை பகுதியில், சம்பா நேரடி விதைப்புப் பயிர்களில் ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், செலவைக் குறைக்கவும் விவசாயிகள் நவீன தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா நேரடி விதைப்பு செய்து 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பயிர்களுடன் களைகளும் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழைநீரைப் பயன்படுத்தி விவசாயிகள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பாரம்பரிய முறையில் கை ஸ்பிரேயர் மூலம் ஒரு ஏக்கருக்கு களைக்கொல்லி அடிக்க வேண்டுமென்றால், 10 டேங்குகள் வரை மருந்து தேவைப்படுவதுடன், அதிக காலதாமதமும் ஆள் கூலியும் ஏற்படுகிறது. ஆனால், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ஒரே ஒரு டேங் மருந்து மட்டுமே தேவைப்படுவதாகவும், தண்ணீரும் மருந்தும் குறைந்த அளவே செலவாவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நவீன முறை மூலம் நேரமும் உழைப்பும் பெருமளவில் மிச்சப்படுவதால் விவசாயிகள் ட்ரோன் மூலமான களைக்கொல்லி தெளிப்புக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔