திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூரில் உள்ள ஜே.பி.ஆர் மஹாலில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தலைமை தாங்கினார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ.செ. வில்வநாதன் முன்னிலை வகித்தார்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு, மொத்தம் ரூ.2.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இந்ிகழ்ச்சியில் அரசுத் துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.









