மணப்பாறை அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள பாலக்கருதம்பட்டியைச் சேர்ந்தவர் 72 வயது செவத்த மணி. இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் பெருமாள்பட்டியைச் சேர்ந்த குருநாதன் மகன் மகாமுனி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செவத்த மணியை அப்பகுதியினர் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை morgue-ல் வைக்கப்பட்டுள்ளது.









