கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பதவி மாற்றம் செய்யக் கோரி, நாமக்காலில் மின்வாரிய அலுவலகம் முன்பு கேங்மேன் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து இந்தக் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. மின்வாரியத் துறையில் பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்களை, கடந்த 14.03.2026 அன்று ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கள உதவியாளர்களாகப் பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், கடந்த 02.11.2026 அன்று மின்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி உடனடியாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.









