Settings

முகப்பு/செய்திகள்/தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள் - 2,500 ஏக்கர் நிலங்கள் வறண்டு வெடிப்பு!
செய்திகள்

தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள் - 2,500 ஏக்கர் நிலங்கள் வறண்டு வெடிப்பு!

🕒 23 நவ., 2026, 07:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள் - 2,500 ஏக்கர் நிலங்கள் வறண்டு வெடிப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாகை மாவட்டம் பாலக்குறிச்சி மற்றும் கடைமடைப் பகுதிகளில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகி வருவதால் 2,500 ஏக்கர் நிலங்கள் வறண்டுள்ளன; ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரிக்கை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகை மாவட்டம் பாலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேட்டூர் அணை நீர் மற்றும் பருவமழை கைகொடுக்காததால், சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரி நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதாலும், கடைமடைப் பகுதிகளுக்குப் போதிய தண்ணீர் வந்து சேராததாலும் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் முதல் கட்டப் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் மீண்டும் நிலத்தை உழுது இரண்டாவது முறையாக விதைப்பு செய்தனர்.

தற்போது இப்பயிர்கள் சுமார் 15 முதல் 40 நாட்கள் வயதுடையதாக உள்ள நிலையில், போதிய மழையின்மையால் வயல்வெளிகள் வறண்டு வெடித்துக் காணப்படுகின்றன. நாகை மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால், டீசல் இன்ஜின்கள் மூலம் நீர் இறைக்கக்கூட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி, இறையான்குடி, களத்திடல்கரை, மடப்புரம், வாழக்கரை, ஏர்வைக்காடு, எட்டுக்குடி, திருக்குவளை, திருவாய்மூர், ஈசனூர், வெண்மணச்சேரி மற்றும் கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாலக்குறிச்சி பகுதியில் மட்டும் சுமார் 2,500 ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.

ஏற்கனவே விவசாயப் பணிகளுக்காக செய்த முதலீட்டை இழந்துள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!

Sugumaran🕒 நவ. 23
சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்செய்திகள்

சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்

Arivazhagan🕒 நவ. 23
மயான சாலை முதல் கோவில் வரை ஆக்கிரமிப்பு: உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் மக்கள் புகார்!செய்திகள்

மயான சாலை முதல் கோவில் வரை ஆக்கிரமிப்பு: உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் மக்கள் புகார்!

Vijay🕒 நவ. 23
கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!செய்திகள்

கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!

Rajan🕒 நவ. 23
காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!செய்திகள்

காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!

MSD🕒 நவ. 23
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!நகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

Arivazhagan🕒 நவ. 23
கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!நகரங்கள்

கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!

Arivazhagan🕒 நவ. 23
வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பாதுகாப்பு தீவிரம்செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பாதுகாப்பு தீவிரம்

Vijay🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔