திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கொடிக்கால் பாளையம் பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சங்கீதா அவர்களின் உத்தரவின்படியும், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் குருதேவ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த தடுப்பூசி முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதையொட்டி, கொடிக்கால் பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜி.ஆர்.எம். (G.R.M.) பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இந்த முகாமில் மருந்தாளுநர் ரமேஷ் குமார், செவிலியர்கள் நிவேதிதா மற்றும் சந்தியா ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இளம் வயதிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்களின் நலனை முன்னிறுத்தி சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.









