வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் நிலைய போலீசார், கிரேன் உதவியுடன் கவிழ்ந்த ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









