விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில் செப்டம்பர் 22-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, பல்வேறு அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வது முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த முகாம் செப்டம்பர் 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நாரணாபுரம் கிராமத்தில் உள்ள லலிதா மஹாலில் நடைபெற உள்ளது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சிவகாசி வட்டம் நாரணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக நேரில் அளித்து, குறைகளுக்கு தீர்வு காணவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்று பயனடையவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி கேட்டுக்கொண்டுள்ளார்.

